Kural 324
குறள் 324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி
nallaaru yenappaduvathu yaathaenin yaathonrum
kollaamai koolum naeri
Shuddhananda Bharati
What way is good? That we can say
The way away from heat to slay.
GU Pope
You ask, What is the good and perfect way?
'Tis path of him who studies nought to slay.
Good path is that which considers how it may avoid killing any creature.
Mu. Varadarajan
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
Parimelalagar
நல்ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி.
விளக்கம்:
('யாது ஒன்றும்' என்றது. ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.) --
Manakkudavar
(இதன் பொருள்) நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதோ ருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி,
(என்றவாறு). இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.