Kural 306
குறள் 306
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்
sinamaennum saerndhthaaraik kolli inamaennum
yaemap punaiyaich sudum
Shuddhananda Bharati
Friend-killer is the fatal rage
It burns the helpful kinship-barge.
GU Pope
Wrath, the fire that slayeth whose draweth near,
Will burn the helpful 'raft' of kindred dear.
The fire of anger will burn up even the pleasant raft of friendship.
Mu. Varadarajan
சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு, ஒருவனுக்கு இனம் என்னும் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.
Parimelalagar
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - சினம் என்னும் நெருப்பு; இனம் என்னும் ஏமப் புனையைச் சுடும் - தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புனையையும் சுடும்.
விளக்கம்:
(சேர்ந்தாரைக் கொல்லி' என்பது ஏதுப் பெயர்; 'தான் சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது' என்றவாறு. 'சேர்ந்தாரை' என உயர்திணைப் பன்மைமேல் வைத்து, ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின், 'சினமென்னும் நெருப்பு' என்ற விதப்பு, 'உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே; 'இந் நெருப்புச் சேராத இடத்தையும் சுடும்,' என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு 'இனம்' என்றது, முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியயராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை. உருவகம் நோக்கிச் 'சுடும்' என்னும் தொழில் கொடுத்தாராயினும், 'அகற்றும்' என்பது பொருளாகக் கொள்க. ஏமப்புணை - ஏமத்தை உபதேசிக்கும் புணை. 'இனம் என்னும் ஏமப்புணை' என்ற ஏகதேச உருவகத்தால், 'பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற' என வருவித்து உரைக்க. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து, எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) சினமென்று சொல்லப் படுகின்ற நெருப்பு தான் துன்பக்கடலி லழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும். சேர்ந்தாரைக் கொல்லி - நெருப்பு ; இது காரணக்குறி. இது சினம் தன்னை யடுத்தாரைச் சொல்லு மென்றது.