Kural 305
குறள் 305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்
thannaiththaan kaakkichiinangkaakka kaavaakkaal thannaiyae
kaavaakkaal thannaiyae kolluchiinam
Shuddhananda Bharati
Thyself to save, from wrath away!
If not thyself the wrath will slay.
GU Pope
If thou would'st guard thyself, guard against wrath alway;
'Gainst wrath who guards not, him his wrath shall slay.
If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.
Mu. Varadarajan
ஒருவன் தன்னைத்தான் காத்துக்கொள்வதானால், சினம் வாராமல் காத்துக்கொள்ள வேண்டும்; காக்காவிட்டால் சினம் தன்னையே அழித்துவிடும்.
Parimelalagar
தன்னைத்தான் காக்கின் சினம் காக்க - தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச் சினம் வராமல் காக்க; காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின், அச் சினம் தன்னையே கெடுக்கும் கடுந்துன்பங்களை எய்துவிக்கும்.
விளக்கம்:
("வேண்டிய வேண்டியாங்கு எய்தல்" (குறள் 265) பயத்தாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதுலின் 'தன்னையே கொல்லும்' என்றார். ''கொல்ச் சுரப்பதாங் கீழ்" (நாலடி (279) என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.)
Manakkudavar
(இதன் பொருள்) ஒருவன் தன்னைத் தான் காக்கவேண்டுவனாயின், சினந் தோற்றா மற் காக்க ; காவானாயின், சினம் தன்னையே கொல்லும்,
(என்றவாறு). இஃது உயிர்க்கேடு வருமென்றது.