குறள் 301

வெகுளாமை

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்

sellidaththuk kaappaachiinangkaappaan allidaththuk kaakkinyen
kaakkinyen kaavaakkaal yen


Shuddhananda Bharati

Restraining anger

Anger against the weak is wrong
It is futile against the strong.


GU Pope

The not being Angry

Where thou hast power thy angry will to work, thy wrath restrain;
Where power is none, what matter if thou check or give it rein?

He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?


Mu. Varadarajan

பலிக்கும்‌ இடத்தில்‌ சினம்‌ வராமல்‌ காப்பவனே சினம்‌ காப்பவன்‌; பலிக்காத இடத்தில்‌ காத்தால்‌ என்ன? காக்காவிட்டால்‌ என்ன?


Parimelalagar

சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான் - தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளாள் தடுப்பானாவான்; அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? நடாது ஒழிந்தார் என்?
விளக்கம்:
('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது. தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். 'வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.)


Manakkudavar

வெகுளாமையாவது வெகுளுதற்குக் காரணமுள்ளவிடத்தும் வெருளாராதல். (இதன் பொருள்) தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாதவனாவான்; இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் பயனில்லை; தவிராததனாலும் பய னில்லை ,
(என்றவாறு). இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது.