குறள் 299

வாய்மை

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

yellaa vilakkum vilakkalla saannorkkup
poiyaa vilakkae vilakku


Shuddhananda Bharati

Veracity

All lights are not lights for the wise;
Truth light is light bright like sun-light


GU Pope

Veracity

Every lamp is not a lamp in wise men's sight;
That's the lamp with truth's pure radiance bright.

All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.


Mu. Varadarajan

(புறத்தில்‌ உள்ள இருளை நீக்கும்‌) விளக்குகள்‌ எல்லாம்‌ விளக்குகள்‌ அல்ல; சான்றோர்க்கு (அகத்து இருள்‌ நீக்கும்‌, பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்‌.


Parimelalagar

எல்லா விளக்கும் விளக்குஅல்ல - புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா; சான்றோர்க்கு விளக்குப் பொய்யா விளக்கே - துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமை ஆகிய விளக்கே.
விளக்கம்:
(உலகத்தார் விளக்காவன: ஞாயிறு, திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாத இருள் போகலின் 'பொய்யா விளக்கே விளக்கு' என்றார். அவ்விருளாவது அறியாமை. 'பொய்யாத விளக்கு' என்பது குறைந்து நின்றது. பொய் கூறாமையாகிய விளக்கு என்றவாறு. இனி இதற்குக் 'கல்வி முதலியவற்றான் வரும்
விளக்கம்:


Manakkudavar

(இதன் பொருள்) சான்றோர்க்கு எல்லாவறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளி யல்ல ; பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாகும்,
(என்றவாறு). இது பொய்யாவிளக்குச் சான்றோர்க்கு இன்றியமையாதென்று கூறிற்று.