குறள் 298

வாய்மை

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

purandhthooimai neeraan amaiyum akandhthooimai
vaaimaiyaal kaanap padum


Shuddhananda Bharati

Veracity

Water makes you pure outward
Truth renders you pure inward.


GU Pope

Veracity

Outward purity the water will bestow;
Inward purity from truth alone will flow.

Purity of body is produced by water and purity of mind by truthfulness.


Mu. Varadarajan

புறத்தே தூய்மையாக விளங்குதல்‌ நீரினால்‌ ஏற்படும்‌; அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல்‌ வாய்மையால்‌ உண்டாகும்‌.


Parimelalagar

புறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே உண்டாம்; அகம் தூய்மை வாய்மையான் காணப்படும் - அது போல, மனம் தூய்தாந்தான்மை வாய்மையான் உண்டாம்.
விளக்கம்:
(காணப்படுவது உள்ளதாகலின், 'உண்டாம்' என்று உரைக்கப்பட்டது. உடம்பு தூய்தாதல்: வாலாமை நீங்குதல்; மனம் தூய்தாதல் மெய்யுணர்தல், புறம் தூய்மைக்கு நீரல்லது காரணம் இல்லாதாற் போல, அகம் தூய்மைக்கு வாய்மையல்லது காரணம் இல்லை என்பதாம். இதனானே, துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டும் என்பதூஉம் பெற்றாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) உடம்பு தூயதாதல் நீரினாலே யமைந்து விடும் ; மனத்தின் தூய்மை மெய் சொல்லுதலினாலே யறியப்படும்,
(என்றவாறு).