குறள் 296

வாய்மை

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்

poiyaamai anna pukalillai yeiyaamai
yellaa aramundh tharum


Shuddhananda Bharati

Veracity

Not to lie brings all the praise
All virtues from Truth arise.


GU Pope

Veracity

No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously.

There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue.


Mu. Varadarajan

ஒருவனுக்குப்‌ பொய்‌ இல்லாமல்‌ வாழ்தலைப்‌ போன்ற புகழ்நிலை வேறொன்றும்‌ இல்லை; அஃது அவன்‌ அறியாமலே அவனுக்கு எல்லா அறமும்‌ கொடுக்கும்‌.


Parimelalagar

பொய்யாமை அன்ன புகழ் இல்லை - ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமையை ஒத்த புகழ்க் காரணம் இல்லை; எய்யாமை எல்லா அறமும் தரும் - மறுமைக்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும் தானே கொடுக்கும்.
விளக்கம்:
('புகழ்' ஈண்டு ஆகுபெயர். இல்லறத்திற்குப் பொருள் கூட்டல் முதலியவற்றானும், துறவறத்திற்கு உண்ணாமை முதலியவற்றானும் வருந்தல் வேண்டுமன்றே? அவ்வருத்தங்கள் புகுதாமல் அவ்விருவகைப் பயனையும் தானே தரும் என்பார். 'எய்யாமை எல்லா அறமும் தரும்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) பொய்யாமையை யுடையன் என்பதனோடு ஒத்த புகழ் வேறொன் றில்லை; பொய்யாமையானது அவனறியாமல் தானே எல்லா அறங்களையுங் கொடுக்குமாதலான்,
(என்றவாறு).