குறள் 295

வாய்மை

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை

manaththodu vaaimai moliyin thavaththodu
thaananjsei vaarin thalai


Shuddhananda Bharati

Veracity

To speak the truth from heart sincere
Is more than giving and living austere.


GU Pope

Veracity

Greater is he who speaks the truth with full consenting mind.
Than men whose lives have penitence and charity combined.

He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.


Mu. Varadarajan

ஒருவன்‌ தன்‌ மனத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால்‌, அவன்‌ தவத்தோடு தானமும்‌ ஒருங்கே செய்வாரைவிடச்‌ சிறந்தவன்‌.


Parimelalagar

மனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன் மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின்; தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன்.
விளக்கம்:
(மனத்தொடு பொருந்துதல்-மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) மனத்தோடே கூட மெய் சொல்லுவனாயின், தவத்தோடே கூடத் தானஞ் செய்வாரில் தலையாவான்,
(என்றவாறு) இஃது எல்லா நன்மையும் பயக்கு மென்றது.