குறள் 294

வாய்மை

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்

ullaththaatr poiyaa tholukin ulakaththaar
ullaththu laellaam ulan


Shuddhananda Bharati

Veracity

He lives in loving hearts of all
Who serves the Truth serene in soul.


GU Pope

Veracity

True to his inmost soul who lives,- enshrined
He lives in souls of all mankind.

He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.


Mu. Varadarajan

ஒருவன்‌ தன்‌ உள்ளம்‌ அறியப்‌ பொய்‌ இல்லாமல்‌ நடப்பானானால்‌, அத்தகையவன்‌ உலகத்தாரின்‌ உள்ளங்களில்‌ எல்லாம்‌ இருப்பவனாவான்‌.


Parimelalagar

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின்; உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம். 'உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம்.
விளக்கம்:
(பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல். அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின், உலகத் தார் நெஞ்சினு ளெல்லாம் உளனாவன்,
(என்றவாறு). இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவரென்றது.