குறள் 293

வாய்மை

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்

thannaenj charivathu poiyatrka poiththapin
thannaenjsae thannaich sudum


Shuddhananda Bharati

Veracity

Let not a man knowingly lie;
Conscience will scorch and make him sigh.


GU Pope

Veracity

Speak not a word which false thy own heart knows
Self-kindled fire within the false one's spirit glows.

Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).


Mu. Varadarajan

ஒருவன்‌ தன்‌ நெஞ்சம்‌ அறிவதாகிய ஒன்றைக்‌ குறித்துப்‌ பொய்‌ சொல்லக்கூடாது. பொய்‌ சொன்னால்‌ அதைக்‌ குறித்துத்‌ தன்‌ நெஞ்சமே தன்னை வருத்தும்‌.


Parimelalagar

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யா தொழிக; பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் - பொய்த்தானாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும்.
விளக்கம்:
(நெஞ்சு கரியாதல் "கண்டவர இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்" (கலித். நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தன்னெஞ்சு அறிந்ததனைப் பொய்யாது சொல்லுக ; பொய்ப்பனா யின், தன்னெஞ்சு தானே தன்னை யொறுக்கும்,
(என்றவாறு). சுடுதலாவது அதனாற் பிறர்க்கு உளதாகுந் தீமையைக் கண்டு என் செய் தோம் யாமென்று வருந்துவித்தல். இது பொய்யாமை வேண்டு மென்றது.