குறள் 291

வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

vaaimai yenappaduvathu yaathaenin yaathonrum
theemai ilaatha solal


Shuddhananda Bharati

Veracity

If "What is truth"? the question be,
It is to speak out evil-free.


GU Pope

Veracity

You ask, in lips of men what 'truth' may be;
'Tis speech from every taint of evil free.

Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).


Mu. Varadarajan

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால்‌ அது மற்றவர்க்கு ஒரு சிறிதும்‌ தீமை இல்லாத சொற்களைச்‌ சொல்லுதல்‌ ஆகும்‌.


Parimelalagar

வாய்மை எனப்படுவது யாது எனின் - மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின்; தீமை யாதொன்றும் இலாத சொலல் - அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல்.
விளக்கம்:
('தீமை யாதொன்றும் இலாத' என இயையும். 'எனப்படுவது' என்பது 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அதுதானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம்; பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.)


Manakkudavar

வாய்மையாவது பொய் சொல்லாமை. (இதன் பொருள்) பொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், பிறர்க்கு யாதொன்றானும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல். வாய்மை யாது என்றார்க்கு , இது கூறப்பட்டது.