குறள் 288

கள்ளாமை

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு

alavarindhthaar naenjchath tharampola nitrkum
kalavarindhthaar naechil karavu


Shuddhananda Bharati

The absence of fraud

Virtue abides in righteous hearts
Into minds of frauds deceit darts.


GU Pope

The Absence of Fraud

As virtue dwells in heart that 'measured wisdom' gains;
Deceit in hearts of fraudful men established reigns.

Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.


Mu. Varadarajan

அளவறிந்து வாழ்கின்றவரின்‌ நெஞ்சில்‌ நிற்கும்‌ அறம்போல்‌, களவுசெய்து பழகி அறிந்தவரின்‌ நெஞ்சில்‌ வஞ்சம்‌ நிற்கும்‌.


Parimelalagar

அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் - அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றார்போல நிலைபெறும்; களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை.
விளக்கம்:
(உயிர் முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நேரறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறு போல், நிற்கும்; களவறிந்தவர் நெஞ்சில் வஞ்சகமும்,
(என்றவாறு). இது களவு காண்பாரைப் பின்பு களவினின்று தவிர்த்தல் முடியாதென் றது.