குறள் 287

கள்ளாமை

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்

kalavaennum kaarari vaanmai alavaennum
aatrral purindhthaarkan il


Shuddhananda Bharati

The absence of fraud

Men of measured wisdom shun
Black art of fraud and what it won.


GU Pope

The Absence of Fraud

Practice of fraud's dark cunning arts they shun,
Who long for power by 'measured wisdom' won.

That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.


Mu. Varadarajan

களவு என்பதற்குக்‌ காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல்‌, அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில்‌ இல்லை.


Parimelalagar

களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல் 'அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை.
விளக்கம்:
(இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவெனும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்ற' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) களவாகிய பொல்லா அறிவுடைமை நேராகிய பெருமையைப் பொருந்தினார் மாட்டு இல்லை,
(என்றவாறு). இது நேரறிந்தவர் களவு காணாரென்றது.