Kural 284
குறள் 284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்
kalavinkan kanriya kaathal vilaivinkan
veeyaa vilumam tharum
Shuddhananda Bharati
The fruit that fraud and greed obtain
Shall end in endless grief and pain.
GU Pope
The lust inveterate of fraudful gain,
Yields as its fruit undying pain.
The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.
Mu. Varadarajan
களவுசெய்து பிறர்பொருள் கொள்ளுதலின் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும்போது தொலையாத துன்பத்தைத் தரும்.
Parimelalagar
களவின்கண் கன்றி காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை; விளைவின்கண் வீயா விழுமம் தரும் - அப்பொழுது இனிது போலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும்.
விளக்கம்:
(கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின், 'வீயா விழுமம் தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) களவின்கண்ணே மிக்க ஆசை , பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும்,
(என்றவாறு). இது நரகம் புகுத்தும் என்றது.