குறள் 282

கள்ளாமை

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்

ullaththaal ullalum theethae piranporulaik
kallaththaal kalvaem yenal


Shuddhananda Bharati

The absence of fraud

"We will by fraud win other's wealth"
Even this thought is sin and stealth.


GU Pope

The Absence of Fraud

'Tis sin if in the mind man but thought conceive;
'By fraud I will my neighbour of his wealth bereave.'

Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another.


Mu. Varadarajan

குற்றமானதை உள்ளத்தால்‌ எண்ணுவதும்‌ குற்றமே; அதனால்‌ பிறன்‌ பொருளை அவன்‌ அறியாத வகையால்‌, வஞ்சித்துக்‌ கொள்வோம்‌' என்று எண்ணாதிருக்க வேண்டும்‌.


Parimelalagar

உள்ளத்தால் உள்ளலும் தீதே - குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம்; பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் - ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியா வகையால் வஞ்சித்து கொள்வோம் என்று கருதற்க.
விளக்கம்:
('உள்ளத்தால்' என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. 'உள்ளலும்' என்பது இழிவு சிறப்பு உம்மை. 'அல்' விகுதி வியங்கோள் எதிர்மறைக்கண் வந்தது. இவை இரண்டு பாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃது என்பதூஉம், அது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்). பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தாலும் தீதாம்; ஆதலால், அதனை மறைவினாலே கள்வே மென்று முயலாதொழிக.
(என்றவாறு). இது களவு தீதென்றது.