குறள் 280

கூடாவொழுக்கம்

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்

maliththalum neetdalum vaentaa ulakam
paliththathu oliththu vitin


Shuddhananda Bharati

Imposture

No balding nor tangling the hair!
Abstain from condemned acts with care.


GU Pope

Inconsistent Conduct

What's the worth of shaven head or tresses long,
If you shun what all the world condemns as wrong?

There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.


Mu. Varadarajan

உலகம்‌ பழிக்கும்‌ தியொழுக்கத்தை விட்டுவிட்டால்‌, மொட்டை அடித்தலும்‌ சடைவளர்த்தலுமாகிய புறக்‌ கோலங்களும்‌ வேண்டா.


Parimelalagar

மழித்தலும் நீட்டலும் வேண்டா - தவம் செய்வோர்க்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா. உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்துவிடின்.
விளக்கம்:
(பறித்தலும் மழித்தலுள் அடங்கும். மழித்தல் என்பதே தலைமயிரை உணர்த்தலின் அது கூறார் ஆயினார். இதனால் கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டா என அவரது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா ; உல் கத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின்,
(என்றவாறு). இது வேடத்தாற் பயனில்லை; நல்லொழுக்கமே வேண்டுமென்றது.