Kural 278
குறள் 278
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்
manaththathu maasaaka maantaar neeraati
maraindhtholuku maandhthar palar
Shuddhananda Bharati
Filthy in mind some bathe in streams
Hiding sins in showy extremes.
GU Pope
Many wash in hollowed waters, living lives of hidden shame;
Foul in heart, yet high upraised of men in virtuous fame.
There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt).
Mu. Varadarajan
மனத்தில் மாசு இருக்கத் தவத்தால் மாண்பு பெற்றவரைப் போல நீரில் மூழ்கி மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.
Parimelalagar
மாசு மனத்தது ஆக - மாசு தம் மனத்தின் கண்ணதாக; மாண்டார் நீர் ஆடி - பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுடையராய் நீரின் மூழ்கிக் காட்டி; மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - தாம் அதன்கண்ணே மறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப் பலர்.
விளக்கம்:
(மாசு: காம வெகுளி மயக்கங்கள்: அவை போதற்கு அன்றி மாண்டார் என்று பிறர் கருதுததற்கு நீராடுதலான், அத்தொழிலை அவர் மறைதற்கு இடனாக்கினார். இனி, 'மாண்டார் நீராடி' என்பதற்கு 'மாட்சிமைப் பட்டாரது நீர்மையை உடையராய்' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்வொழுக்கமுடையாரது குற்றமும், அவரை அறிந்து நீக்கல் வேண்டும் என்பதும் கூறப்பட்டன.)
Manakkudavar
(இதன் பொருள்) மாசு மனத்தின்கண் உண்டாக வைத்து, மாட்சிமைப் பட்டாரது நீர்மையைப் பூண்டு, பொருந்தாத விடத்திலே மறைந் தொழுகு மாந்தர் பலர், () இது பலர்க்குக் கூடாவொழுக்க முண்டாகு மென்றது.