குறள் 277

கூடாவொழுக்கம்

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து

purangkunri kandanaiya raenum akangkunri
mookkitr kariyaar utaiththu


Shuddhananda Bharati

Imposture

Berry-red is his outward view,
Black like its nose his inward hue.


GU Pope

Inconsistent Conduct

Outward, they shine as 'kunri' berry's scarlet bright;
Inward, like tip of 'kunri' bead, as black as night.

(The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry.


Mu. Varadarajan

புறத்தில்‌ குன்றிமணிபோல்‌ செம்மையானவராய்க்‌ காணப்பட்டாராயினும்‌, அகத்தில்‌ குன்றிமணியின்‌ மூக்குப்போல்‌ கருத்திருப்பவர்‌ உலகில்‌ உண்டு.


Parimelalagar

குன்றிப் புறம் கண்டு அனையரேனும் - குன்றியின் புறம் போல வேடத்தாற் செம்மையுடையராயினம், குன்றி மூக்கின் அகம் கரியார் உடைத்து - அதன் மூக்குப் போல மனம் இருண்டு இருப்பாரை உடைத்து உலகம்.
விளக்கம்:
('குன்றி' ஆகுபெயர். செம்மை கருமை என்பன பொருள்களின் நிறத்தை விட்டுச் செப்பத்தினும் அறியாமையினும் சென்றன. ஆயினும், பண்பால் ஒத்தலின் இவை பண்பு உவமை. "ஊழின் மலிமனம் போன்று இருளாநின்ற கோகிலமே" (திருக்கோவை 322) என்பதும் அது.)


Manakkudavar

(இதன் பொருள்) புறத்தே குன்றி நிறம் போன்ற தூய வேடத்தரா யிருப்பினும், அகத்தே குன்றி மூக்குப் போலக் கரியரா யிருப்பாரை உடைத்து இவ்வுலகம். இஃது அறிஞர் தவத்தவரை வடிவு கண்டு நேர்படா ரென்றது.