Kural 271
குறள் 271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
vanjcha manaththaan patitrrolukkam poothangkal
aindhthum akaththae nakum
Shuddhananda Bharati
Elements five of feigned life
Of a sly hypocrite within laugh.
GU Pope
Who with deceitful mind in false way walks of covert sin,
The five-fold elements his frame compose, decide within.
The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man.
Mu. Varadarajan
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.
Parimelalagar
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் - வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் - உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும்.
விளக்கம்:
(காமம் தன் கண்ணே தோன்றி நலியா நிற்கவும், அதனது, இன்மை கூறிப் புறத்தாரை வஞ்சித்தலின் 'வஞ்சமனம்' என்றும், அந்நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவு ஒழுக்கத்தைப் 'படிற்று ஒழுக்கம்' என்றும், உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து, அவனறியாமல் தம் முள்ளே நகுதலின், 'அகத்தே நகும்' என்றும் கூறினார். செய்த குற்றம் மறையாது ஆகலின், அவ்வொழுக்கம் ஆகாது என்பது கருத்து.)
Manakkudavar
கூடாவொழுக்கமாவது மேற்கூறிய தவத்திற்குப் பொருந்தாத ஒழுக்கம். (இதன் பொருள்) கள்ள மனத்தை யுடையானது குற்றத்தினையுடைய ஒழுக் கத்தைப் பிறரறியாராயினும், தன்னுடம்பி னுண்டான பூதங்களைந்தும் அறிந்து தம்முள்ளே நகாவிற்கும்,
(என்றவாறு). பூதங்களென்றது அவையிற்றின் காரியமாகிய பொறிகளை .