Kural 263
குறள் 263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்
thurandhthaarkkuth thuppuravu vaenti marandhthaarkol
matrrai yavarkal thavam
Shuddhananda Bharati
Is it to true penitent's aid,
That others austere path avoid?
GU Pope
Have other men forgotten 'penitence' who strive
To earn for penitents the things by which they live?
It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?
Mu. Varadarajan
துறந்தவர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவ வேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்வதை மறந்தார்களோ?
Parimelalagar
மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார்; துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும்!
விளக்கம்:
(துப்புரவு - அனுபவிக்கப்படுவன. ''வேண்டியாங்கு எய்தற்" பயத்தது ஆகலின் (குறள் 265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும் எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டித் தவிர்ந்தா ராயினரோ? இல்வாழ்வார் தவஞ் செய்தலை,
(என்றவாறு). இது தானத்தினும் தவம் மிகுதியுடைத்தென்றது.