குறள் 26

நீத்தார் பெருமை

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

seyatrkariya seivaar paeriyachiiriyar seyatrkariya
seyatrkariya seikalaa thaar


Shuddhananda Bharati

The merit of Ascetics

The small the paths of ease pursue
The great achieve things rare to do.


GU Pope

The Greatness of Ascetics

Things hard in the doing will great men do;
Things hard in the doing the mean eschew.

The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.


Mu. Varadarajan

செய்வதற்கு அருமையான செயல்களைச்‌ செய்ய வல்லவரே பெரியோர்‌. செய்வதற்கு அரிய செயல்களைச்‌ செய்யமாட்டாதவர்‌ சிறியோர்‌.


Parimelalagar

செயற்கு அரிய செய்வார் - பெரியர்-ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்; செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்ய மாட்டாதார் சிறியர்.
விளக்கம்:
(செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம், நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புக்கள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய "நாலிரு வழக்கின் தாபதபக்கம்" என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.)


Manakkudavar

(இதன் பொருள்) செயற்கு அரியன் செய்வாரைப் பெரியோரென்று சொல்லு வர்; அவற்றைச் செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியோரென்று சொல்லுவர்,
(என்றவாறு). செயற்கரியன் - இயம நியம் முதலாயின. இவ்வதிகாரம் நீத்தார் பெருமை யென்று கூறப்பட்டதாயினும், துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள் ளப்படார் ; செயற்கரியன் செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று.