குறள் 254

புலான்மறுத்தல்

அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்

arulallathu yaathaenil kollaamai koaral
porulallathu avvoon thinal


Shuddhananda Bharati

Abstinence from flesh

If merciless it is to kill,
To kill and eat is disgraceful.


GU Pope

The Renunciation of Flesh

'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill';
To eat dead flesh can never worthy end fulfil.

If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life).


Mu. Varadarajan

அருள்‌ எது என்றால்‌ ஓர்‌ உயிரையும்‌ கொல்லாமலிருத்தல்‌; அருளல்லாதது எது என்றால்‌ உயிரைக்‌ கொல்லுதல்‌; அதன்‌ உடம்பைத்‌ தின்னுதல்‌ அறம்‌ அல்லாதது.


Parimelalagar

அருள் யாது எனின் கொல்லாமை-அருள் யாது எனின் கொல்லாமை: அல்லது (யாதெனின்) கோறல் - அருள் அல்லது யாது எனின் கோறல்; அவ்வூன் தினல் பொருள் அல்லது - ஆகலான் அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம்.
விளக்கம்:
(உபசாரவழக்கால் 'கொல்லாமை, கோறல்' ஆகிய காரியங்களை 'அருள் அல்லது' எனக் காரணங்கள் ஆக்கியும், 'ஊன் தின்கை' ஆகிய காரணத்தைப் 'பாவம்' எனக் காரியமாக்கியும் கூறினார். அருளல்லது-கொடுமை. சிறப்புப் பற்றி அறமும் பொருள் எனப்படுதலின், பாவம் 'பொருள் அல்லது' எனப்பட்டது. 'கோறல்' என முன் நின்றமையின் 'அவ்வூன்' என்றார். இனி, இதனை இவ்வாறன்றி 'அருளல்லது' என்பதனை ஒன்றாக்கி, 'கொல்லாமை கோறல்' என்பதற்குக் 'கொல்லாமை என்னும் விரதத்தை அழித்தல்' என்று உரைப்பாரு உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) அருளல்லது யாதெனின், கொல்லாமையைச் சிதைத்தல் ; பொருளல்லது யாதெனின், அவ்வூனைத் தின்றல்,
(என்றவாறு). இஃது அதனை யுண்டதனால் அருள் கெடுதலேயன்றி, பெறுவதொரு பயனுமில்லை என்றது.