குறள் 253

புலான்மறுத்தல்

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்

pataikontaar naenjchampol nanrookkaathu onran
udalsuvai untaar manam


Shuddhananda Bharati

Abstinence from flesh

Who wields a steel is steel-hearted
Who tastes body is hard-hearted.


GU Pope

The Renunciation of Flesh

Like heart of them that murderous weapons bear, his mind,
Who eats of savoury meat, no joy in good can find.

Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness.


Mu. Varadarajan

ஓர்‌ உயிரின்‌ உடம்பைச்‌ சுவையாக உண்டவரின்‌ மனம்‌ கொலைக்கருவியைக்‌ கையில்‌ கொண்டவரின்‌ நெஞ்சம்‌ போல்‌ நன்மையாகிய அருளைப்‌ போற்றாது.


Parimelalagar

படை கொண்டார் நெஞ்சம் போல்-கொலைக் கருவியைத் தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவதல்லது அருளை நோக்காதவாறு போல; ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது-பிறிதோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ் வூனையே நோக்குவது அல்லது அருளை நோக்காது.
விளக்கம்:
(சுவைபட உண்டல், காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்ட . இதனான் ஊன் தின்றார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஆயுதம் கையிற் கொண்டவர் நெஞ்சுபோல், நன்மையை நினை யாது; ஒன்றினுடலைச் சுவைப்படவுண்டார் மனம்,
(என்றவாறு).