குறள் 252

புலான்மறுத்தல்

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு

porulaachi potrraathaarkku illai arulaachi
aangkillai oonthin pavarkku


Shuddhananda Bharati

Abstinence from flesh

The thriftless have no property
And flesh-eaters have no pity.


GU Pope

The Renunciation of Flesh

No use of wealth have they who guard not their estate;
No use of grace have they with flesh who hunger sate.

As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.


Mu. Varadarajan

பொருளுடையவராக இருக்கும்‌ சிறப்பு, அப்பொருளை வைத்துக்‌ காப்பாற்றாதவர்க்கு இல்லை; அருளுடையவராக இருக்கும்‌ சிறப்பு, புலால்‌ தின்பவர்க்கு இல்லை.


Parimelalagar

பொருள் ஆட்சி போற்றார்தார்க்கு இல்லை-பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை; ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்களுக்கு இல்லை-அது போல அருளாள் பயன் கோடல் ஊன் தின்பவர்களுக்கு இல்லை.
விளக்கம்:
(பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்பயன் இழத்தற்கு ஊன் தின்னல் காரணம் என்பதாயிற்று. ஊன் தின்றாராயினும் உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆள்தற்கு இழுக்கு இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பொருளிதனை யாளுதல் அதனை காக்க மாட்டாதார்க்கு இல்லை; அதுபோல, அருளினை யாளுதல் ஊன் தின்பவர்க்கு இல்லை,
(என்றவாறு). இஃது ஊனுண்ண அருட்கேடு வருமென்றது.