குறள் 251

புலான்மறுத்தல்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

thannoon paerukkatrkuth thaanpirithu oonunpaan
yengnyanam aalum arul


Shuddhananda Bharati

Abstinence from flesh

What graciousness can one command
who feeds his flesh by flesh gourmand.


GU Pope

The Renunciation of Flesh

How can the wont of 'kindly grace' to him be known,
Who other creatures' flesh consumes to feed his own?

How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures.


Mu. Varadarajan

தன்‌ உடம்பைப்‌ பெருக்கச்‌ செய்வதற்காகத்‌ தான்‌ மற்றோர்‌ உயிரின்‌ உடம்பைத்‌ தின்கின்றவன்‌ எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்‌?


Parimelalagar

தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் - தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன்; எங்ஙனம் ஆளும் அருள் - எவ்வகையான் நடத்தும் அருளினை?
விளக்கம்:
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் - தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன்; எங்ஙனம் ஆளும் அருள் - எவ்வகையான் நடத்தும் அருளினை? (பயன் இலாத ஊன் பெருக்கலைப் பயன் எனக் கருதி இக்கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று. 'எங்ஙனம் ஆளும் அருள்' என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறிப்பு.)


Manakkudavar

புலான் மறுத்தலாவது புலால் தின்றால் அருளில்லையா மென்பதனாற் புலாலை விடுகை. (இதன் பொருள்) தன்னுடம்பை வளர்த்தற்குத் தான் பிறிதொன்றினது உடம்பை உண்ணுமவன், அருளுடையவனாவது மற்றியாதானோ
(என்றவாறு). ஊனுண்ண அருள்கெடுமோ என்றாக்கு, இது கூறப்பட்டது.