குறள் 244

அருளுடைமை

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை

mannuyir oampi arulaalvaarkku illaenpa
thannuyir anjsum vinai


Shuddhananda Bharati

Compassion

His soul is free from dread of sins
Whose mercy serveth all beings.


GU Pope

The Possession of Benevolence

Who for undying souls of men provides with gracious zeal,
In his own soul the dreaded guilt of sin shall never feel.

(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures)


Mu. Varadarajan

தன்‌ உயிரின்‌ பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில்‌ நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப்‌ போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.


Parimelalagar

மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு; தன் உயிர் அஞ்சும் வினை இல்என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர்.
விளக்கம்:
(உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல் துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) நிலைபெற்ற உயிரை ஒம்பி அருளை ஆள்வானுக்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை வருவ தில்லையென்று சொல்லுவார், (எ - று ). இது தீமை வாராதென்றது.