குறள் 231

புகழ்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

eethal isaipada vaalthal athuvallathu
oothiyam illai uyirkku


Shuddhananda Bharati

Renown

They gather fame who freely give
The greatest gain for all that live.


GU Pope

Renown

See that thy life the praise of generous gifts obtain;
Save this for living man exists no real gain.

Give to the poor and live with praise. There is no greater profit to man than that.


Mu. Varadarajan

வறியவர்க்கு ஈதல்‌ வேண்டும்‌. அதனால்‌ புகழ்‌ உண்டாக வாழவேண்டும்‌. அப்புகழ்‌ அல்லாமல்‌ உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும்‌ இல்லை.


Parimelalagar

ஈதல் வறியார்க்கு ஈக; இசைபட வாழ்தல்-அதனால் புகழ் உண்டாக வாழ்க; அது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை-அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப் பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான்.
விளக்கம்:
(இசைபட வாழ்தற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும், "உணவின் பிண்டம் உண்டி முதற்று" (புறநா.18) ஆகலின், ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக 'ஈதல்' என்றார். 'உயிர்க்கு என்பது, பொதுபடக் கூறினாரேனும், விலங்கு உயிர்கட்கு ஏலாமையின், மக்கள் உயிர்மேல் நின்றது.)


Manakkudavar

புகழாவது புகழ்பட வாழ்தல். (இதன் பொருள்) புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல் ; அக்கொடையானல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை,
(என்றவாறு). இது புகழுண்டாமாறு கூறிற்று.