Kural 226
குறள் 226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
atrraar alipasi theerththal akhthoruvan
paetrraan porulvaip puli
Shuddhananda Bharati
Drive from the poor their gnawing pains
If room you seek to store your gains.
GU Pope
Let man relieve the wasting hunger men endure;
For treasure gained thus finds he treasure-house secure.
The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth.
Mu. Varadarajan
வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
Parimelalagar
அற்றார் அழிபசி தீர்த்தல்-வறியாரது மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க; பொருள்பெற்றான் ஒருவன்வைப்புழி அஃது-பொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான்.
விளக்கம்:
(எல்லா நன்மைகளும் அழிய வருதலின், 'அழி பசி' என்றார். 'அறம் நோக்கி' என்பது எஞ்சி நின்றது. 'அற்றார் அழிபசி தீர்த்த' பொருள் பின் தனக்கே வந்து உதவும் என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) பொருளற்றாரது குணங்களையழிக்கும் பசியைப் போக்குக; அது செய்ய ஒருவன் தான் தேடின பொருள்வைத்தற்கு இடம் பெற்றானாம், (எ-று). இது பகுத்துண்ணப் பொருளழியாது என்றது.