குறள் 224

ஈகை

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு

innaathu irakkap paduthal irandhthavar
inmukang kaanum alavu


Shuddhananda Bharati

Charity

The cry for alms is painful sight
Until the giver sees him bright.


GU Pope

Giving

The suppliants' cry for aid yields scant delight,
Until you see his face with grateful gladness bright.

To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.


Mu. Varadarajan

பொருள்‌ வேண்டும்‌ என்று இரந்தவரின்‌ மகிழ்ந்த முகத்தைக்‌ காணும்‌ வரைக்கும்‌ (இரத்தலைப்‌ போலவே, இரந்து கேட்கப்படுதலும்‌ துன்பமானது.


Parimelalagar

இரக்கப்படுதல் இன்னாது-இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிது அன்று; இரந்தவர் இன்முகம் காணும் அளவு-ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும் அளவும்;
விளக்கம்:
(எச்ச உம்மையும் முற்று உம்மையும் விகாரத்தால் தொக்கன. இரக்கப்படுதல்-'இரப்பார்க்கு ஈவல்' என்று இருத்தல். அதனை 'இன்னாது' என்றது, 'எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை' (நாலடி. 145) கூடுங்கொல்லோ என்னும் அச்சம் நோக்கி. எனவே, எல்லாப் பொருளும் ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறன் ஒருவனாலிரக்கப்படுதலும் இன்னாது; எவ்வளவு மெனின், இரந்து வந்தவன் தான் வேண்டியது பெற்றதனானே இனிதான முகங் காணு மளவும்,
(என்றவாறு) இது கொடுக்குங்கால் தாழாது கொடுக்கவேண்டுமென்றது.