குறள் 217

ஒப்புரவறிதல்

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்

marundhthaakith thappaa maraththatrraal selvam
paerundhthakai yaankan patin


Shuddhananda Bharati

Duty to society

The wealth of a wide-hearted soul
Is a herbal tree that healeth all.


GU Pope

The Knowledge of What is Befitting a Man's Position

Unfailing tree that healing balm distils from every part,
Is ample wealth that falls to him of large and noble heart.

If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease.


Mu. Varadarajan

ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடம்‌ செல்வம்‌ சேர்ந்தால்‌, அஃது எல்லா உறுப்புக்களும்‌ மருந்தாகிப்‌ பயன்படத்‌ தவறாத மரம்‌ போன்றது.


Parimelalagar

செல்வம் பெருந்தகையான்கண் படின்-செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையுடையான் கண்ணே படுமாயின், மருந்து ஆகித் தப்பா மரத்தற்று-அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும்.
விளக்கம்:
(தப்புதலாவது, கோடற்கு அரிய இடங்களில் இன்றாதல், மறைந்து நின்றாதல், காலத்தான் வேறுபட்டதல், பயன்படாமை. தன் குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டானனுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பிணிமருந்தாகித் தேடுவார்க்கு மறைதலில்லாத மரத்தை யொக் கும்; செல்வமானது பெருந்தகைமையான்மாட்டு உண்டாயின், (எ – று). தப்புதலென்றது ஒளித்தலை.