குறள் 216

ஒப்புரவறிதல்

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

payanmaram ulloorp paluththatrraal selvam
nayanutai yaankan patin


Shuddhananda Bharati

Duty to society

Who plenty gets and plenty gives
Is like town-tree teeming with fruits.


GU Pope

The Knowledge of What is Befitting a Man's Position

A tree that fruits in th' hamlet's central mart,
Is wealth that falls to men of liberal heart.

The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.


Mu. Varadarajan

ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம்‌ செல்வம்‌ சோந்தால்‌, அஃது ஊரின்‌ நடுவே உள்ள பயன்‌ மிகுந்த மரம்‌ பழங்கள்‌ பழுத்தாற்‌ போன்றது.


Parimelalagar

செல்வம் நயன் உடையான்கண் படின்-செல்வம் ஒப்புரவு செய்வான்கண்ணே படுமாயின்; பயன் மரம் உள்ளூர் பழுத்தற்று-அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும்.
விளக்கம்:
(உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார். எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) பயன்படுமரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும்; பிறரால் விரும்பப் படுவான் மாட்டுச் செல்வ முண்டாயின்,
(என்றவாறு). இது வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது.