குறள் 214

ஒப்புரவறிதல்

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

oththa tharivaan uyirvaalvaan matrraiyaan
seththaarul vaikkap padum


Shuddhananda Bharati

Duty to society

He lives who knows befitting act
Others are deemed as dead in fact.


GU Pope

The Knowledge of What is Befitting a Man's Position

Who knows what's human life's befitting grace,
He lives; the rest 'mongst dead men have their place.

He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.


Mu. Varadarajan

ஒப்புரவை அறிந்து போற்றிப்‌ பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன்‌ உயிர்வாழ்கின்றவன்‌ ஆவான்‌; மற்றவன்‌ செத்தவருள்‌ சேர்த்துக்‌ கருதப்படுவான்‌.


Parimelalagar

உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான்-உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்-அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.
விளக்கம்:
(உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேதநடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன் ; அஃ தறியான் செத்தவருள் ஒருவனாக எண்ண ப்படுவன்,
(என்றவாறு). இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.