குறள் 213

ஒப்புரவறிதல்

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற

puththae lulakaththum eendum paeralarithae
oppuravin nalla pira


Shuddhananda Bharati

Duty to society

In heav'n and earth 'tis hard to find
A greater good than being kind.


GU Pope

The Knowledge of What is Befitting a Man's Position

To 'due beneficence' no equal good we know,
Amid the happy gods, or in this world below.

It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods.


Mu. Varadarajan

பிறர்க்கு உதவி செய்து வாழும்‌ ஒப்புரவைப்போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத்‌ தேவருலகத்திலும்‌ இவ்வுலகத்திலும்‌ பெறுதல்‌ இயலாது.


Parimelalagar

புத்தேள் உலகத்தும் ஈண்டும்-தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும்; ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது-ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது.
விளக்கம்:
(ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராதலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று; யாவர்க்கும் ஒப்பது இதுபோல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. 'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம் அரிது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது தேவருலகத்தினும் இவ் வுலகத்தினும் பெறுதற்கு அரிதாம்,
(என்றவாறு).