குறள் 212

ஒப்புரவறிதல்

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

thaalaatrrith thandhtha porulaellaam thakkaarkku
vaelaanmai seithatr porutdu


Shuddhananda Bharati

Duty to society

All the wealth that toils give
Is meant to serve those who deserve.


GU Pope

The Knowledge of What is Befitting a Man's Position

The worthy say, when wealth rewards their toil-spent hours,
For uses of beneficence alone 'tis ours.

All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.


Mu. Varadarajan

ஒப்புரவாளன்‌ தன்னால்‌ இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள்‌ எல்லாம்‌ தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்‌.


Parimelalagar

தக்கார்க்கு தகுதி உடையார்க்கு ஆயின்; தான் ஆற்றித் தந்த பொருள் எல்‘ம்-முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும்; வேளாண்மை செய்தற் பொருட்டு-ஒப்புரவு செய்தற் பயத்தவாம்.
விளக்கம்:
(பிறர்க்கு உதவதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம் தகுதியுடையார்க்கு உபகரித்தற்காகவாம்,
(என்றவாறு) இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்க வென்றது.