குறள் 211

ஒப்புரவறிதல்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு

kaimmaaru vaentaa kadappaadu maarimaatdu
yenaatrrung kollo ulaku


Shuddhananda Bharati

Duty to society

Duty demands nothing in turn;
How can the world recompense rain?


GU Pope

The Knowledge of What is Befitting a Man's Position

Duty demands no recompense; to clouds of heaven,
By men on earth, what answering gift is given?

Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?


Mu. Varadarajan

இந்த உலகத்தார்‌ தமக்கு உதவும்‌ மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்‌? மழை போன்றவர்‌ செய்யும்‌ உதவிகளும்‌ கைம்மாறு வேண்டாதவை.


Parimelalagar

மாரிமாட்டு உலகு என் ஆற்றும்-தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன; கடப்பாடு கைம்மாறு வேண்டா-ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல.
விளக்கம்:
('என் ஆற்றும்?' என்ற வினா, 'யாதும் ஆற்றா' என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிரும் தன்மைய அல்ல என்பது 'கடப்பாடு' என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாரது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.)


Manakkudavar

ஒப்புரவறிதலாவது இல்லென இரந்து வந்தார் யாவர்க்கும் வரையாது கொடுக்குமாற்றல் இலரெனினும் தம்மளவிற்கும் தம் வருவாயளவிற்கும் ஏற்கத் தக்கார்க்குத் தக்கனவறிந்து கொடுத்தல். (இதன் பொருள்) ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச் செய்ய வேண்டா ; எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்டோ ? கடப்பாடு - ஒப்புரவு. இஃது ஒப்புரவாவது கைம்மாறு வேண்டாத கொடை யென்று கூறிற்று.