குறள் 210

தீவினையச்சம்

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்

arungkaedan yenpathu arika marungkoatith
theevinai seiyaan yenin


Shuddhananda Bharati

Fear of sin

He is secure, know ye, from ills
Who slips not right path to do evils.


GU Pope

Dread of Evil Deeds

The man, to devious way of sin that never turned aside,
From ruin rests secure, whatever ills betide.

Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.


Mu. Varadarajan

ஒருவன்‌ தவறான நெறியில்‌ சென்று தீய செயல்‌ செய்யாதிருப்பானானால்‌ அவன்‌ கேடு இல்லாதவன்‌ என்று அறியலாம்‌.


Parimelalagar

மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின்-ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர் மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின்; அருங்கேடன் என்பது அறிக-அவன் அரிதாகிய கோட்டையுடையவன் என்பது அறிக.
விளக்கம்:
(அருமை:இன்மை. அருங்கேடன் என்பதனை, "சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்" (அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத் தீவினைகளைச் செய்யானாயின், தனக்குக் கேடுவருவ தில்லை யென்று தானே யறிக,
(என்றவாறு). இது கேடில்லை யென்றது.