குறள் 209

தீவினையச்சம்

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்

thannaiththaan kaathala naayin yenaiththonrum
thunnatrka theevinaip paal


Shuddhananda Bharati

Fear of sin

Let none who loves himself at all
Think of evil however small.


GU Pope

Dread of Evil Deeds

Beware, if to thyself thyself is dear,
Lest thou to aught that ranks as ill draw near!

If a man love himself, let him not commit any sin however small.


Mu. Varadarajan

ஒருவன்‌ தன்னைத்‌ தான்‌ விரும்பி வாழ்பவனாயின்‌, தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும்‌ பொருந்தாமல்‌ நீங்க வேண்டும்‌.


Parimelalagar

தன்னைத் தான் காதலன் ஆயின்-ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின்; தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க-தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.
விளக்கம்:
(நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், 'தீவினைப் பால்' என்றார். பிறர்மாட்டுச் செய்து தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார். ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக,
(என்றவாறு). இது தீவினைக்கு அஞ்ச வேண்டுமென்றது.