குறள் 208

தீவினையச்சம்

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று

theeyavai seithaar keduthal nilalthannai
veeyaathu atiuraindh thatrru


Shuddhananda Bharati

Fear of sin

Ruin follows who evil do
As shadow follows as they go.


GU Pope

Dread of Evil Deeds

Man's shadow dogs his steps where'er he wends;
Destruction thus on sinful deeds attends.

Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.


Mu. Varadarajan

தீய செயல்களைச்‌ செய்தவர்‌ கேட்டை அடைதல்‌, ஒருவனுடைய நிழல்‌ அவனை விடாமல்‌ வந்து அடியில்‌ தங்கியிருத்தலைப்‌ போன்றது.


Parimelalagar

தீயவை செய்தார் கெடுதல்-பிறர்க்குத் தீவினை செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின்; நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று-ஒருவன் நிழல் நொடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கி தன்மைத்து.
விளக்கம்:
(இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றி நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு 'அடி உறைந்த நிழல் தன்னை வீந்தற்று' என்னாது, 'வீயாது அடி உறைந்தற்று,' என்ற பாடமே கரியாயிற்று. மேல், 'வீயாது பின் சென்று அடும்' என்றார். ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) தீயவானவற்றைப் பிறர்க்குச் செய்தார் கெடுதல், நிழல் தன்னை நீங்காதே உள்ளடியின்கீழ் ஒதுங்கினாற் போலும்,
(என்றவாறு). மேல் வினைப்பகை பின் சென்றடுமென்றார் அஃதடுமாறு காட்டினார்.