Kural 207
குறள் 207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்
yenaippakai yutrraarum uivar vinaippakai
veeyaathu pinsenru adum
Shuddhananda Bharati
Men may escape other foes and live
But sin its deadly blow will give.
GU Pope
From every enmity incurred there is to 'scape, a way;
The wrath of evil deeds will dog men's steps, and slay.
However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.
Mu. Varadarajan
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்; ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின்சென்று வருத்தும்.
Parimelalagar
எனைப்பகை உற்றானாம் உய்வர்-எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர்; வினைப்பகை வீயாது பின் சென்று அடும்-அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும்
விளக்கம்:
("வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை" (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.)
Manakkudavar
(இதன் பொருள்) எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும்,
(என்றவாறு). அஃதாமாறு பின் கூறப்படும்.