குறள் 206

தீவினையச்சம்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்

theeppaala thaanpirarkan seiyatrka noippaala
thannai adalvaentaa thaan


Shuddhananda Bharati

Fear of sin

From wounding others let him refrain
Who would from harm himself remain.


GU Pope

Dread of Evil Deeds

What ranks as evil spare to do, if thou would'st shun
Affliction sore through ill to thee by others done.

Let him not do evil to others who desires not that sorrows should pursue him.


Mu. Varadarajan

துன்பம்‌ செய்யும்‌ தீவினைகள்‌ தன்னை வருத்துதலை விரும்பாதவன்‌, தீய செயல்களைத்‌ தான்‌ பிறர்க்குச்‌ செய்யாமலிருக்கவேண்டும்‌.


Parimelalagar

நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான்-துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன்; தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக் கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.
விளக்கம்:
(செய்யின், அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன், தீமை யாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யாதொழிக,
(என்றவாறு). இது நோயுண்டாமென்றது.