குறள் 205

தீவினையச்சம்

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து

ilanyenru theeyavai seiyatrka seiyin
ilanaakum matrrum paeyarththu


Shuddhananda Bharati

Fear of sin

Who makes poverty plea for ill
Shall reduce himself poorer still.


GU Pope

Dread of Evil Deeds

Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still.

Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still.


Mu. Varadarajan

"யான்‌ வறியவன்‌' என்று நினைத்துத்‌ தீய செயல்களைச்‌ செய்யக்கூடாது; செய்தால்‌ மீண்டும்‌ வறியவன்‌ ஆகி வருந்துவான்‌.


Parimelalagar

இலன் என்று தீயவை செய்யற்க-'யான் வறியன்' என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக; செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும்-செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம்.
விளக்கம்:
(அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். 'அன்' விகுதி முன் தனித்தன்மையினும், பின் படர்க்கை யொருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித் குறிஞ்சி. 22) என்பதனானும் அறிக. மற்று-அசைநிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். 'பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க; செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளானும் வறியனாம்,' என்று உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதித் தீவினை யைச் செய்யாதொழிக; செய்வனாயின், பின்பும் நல்குரவினனாவன்; அது செல் வம் பயவாது, (எ-று). இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.