Kural 204
குறள் 204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு
marandhthum pirankaedu koolatrka koolin
aranjkoolum koolndhthavan kaedu
Shuddhananda Bharati
His ruin virtue plots who plans
The ruin of another man's.
GU Pope
Though good thy soul forget, plot not thy neighbour's fall,
Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall.
Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.
Mu. Varadarajan
பிறனுக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக்கூடாது. எண்ணினால், எண்ணியவனுக்குக் கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
Parimelalagar
பிறன் கேடு மறந்தும் சூழற்க-ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்-எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும்.
விளக்கம்:
('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதே தானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக; சூழ்வனாயின், அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவ னுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும்,
(என்றவாறு). இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.