Kural 203
குறள் 203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்
arivinul yellaandh thalaiyaenpa theeya
seruvaarkkum seiyaa vidal
Shuddhananda Bharati
The wisest of the wise are those
Who injure not even their foes.
GU Pope
Even to those that hate make no return of ill;
So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil.
To do no evil to enemies will be called the chief of all virtues.
Mu. Varadarajan
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
Parimelalagar
அறிவினுள் எல்லாம் தலை என்ப-தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர்; செறுவார்க்கும் தீய செய்யா விடல்-தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை.
விளக்கம்:
(விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும், செய்யத் தக்குழியுஞ் செய்யாது ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். 'செய்யாது' என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும் தலை யான அறிவென்று சொல்லுவர் நல்லோர் ; தமக்குத் தீமை செய்வார்க்குந் தாம் தீமை செய்யாதொழிதலை,
(என்றவாறு). இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது.