குறள் 147

பிறனில் விழையாமை

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்

araniyalaan ilvaalvaan yenpaan piraniyalaal
paenmai nayavaa thavan


Shuddhananda Bharati

Against coveting another's wife

He is the righteous householder
His neighbour's wife who covets never.


GU Pope

Not coveting another's Wife

Who sees the wife, another's own, with no desiring eye
In sure domestic bliss he dwelleth ever virtuously.

He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.


Mu. Varadarajan

அறத்தின்‌ இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன்‌, பிறனுக்கு உரிமையானவளின்‌ பெண்‌ தன்மையை விரும்பாதவனே.


Parimelalagar

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான்-அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான்; பிறன் இயலாள் பெண்மை நயவாதவன்-பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன்.
விளக்கம்:
(ஆண் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) அறநெறியானே யில் வாழ்வானென்று சொல்லப்படுவான், பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன்,
(என்றவாறு). இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது.