குறள் 148

பிறனில் விழையாமை

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு

piranmanai nokkaatha paeraanmai saannorkku
aranonno aanra volukku


Shuddhananda Bharati

Against coveting another's wife

They lead a high-souled manly life
The pure who eye not another's wife.


GU Pope

Not coveting another's Wife

Manly excellence, that looks not on another's wife,
Is not virtue merely, 'tis full 'propriety' of life.

That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.


Mu. Varadarajan

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம்‌ மட்டும்‌ அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்‌.


Parimelalagar

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை - பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை; சான்றோர்க்கு அறன் ஒன்றே ஆன்ற ஒழுக்கு-சால்புடையார்க்கு அறனும் ஆம்; நிரம்பிய ஒழுக்கமும் ஆம். புறப் பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும், உட்பகை ஆகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய ஆண்மையைப் 'பேராண்மை' என்றார்.
விளக்கம்:
('ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறனது மனையாளைப் பாராத பெரியவாண்மைதானே, சான் - றோர்க்கு அறனும் அமைந்த வொழுக்கமுமாம்,
(என்றவாறு). இஃது இதனை விரும்பாமைதானே அறனும் ஒழுக்கமு மென்றது.