குறள் 145

பிறனில் விழையாமை

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

yelithaena illirappaan yeithumaenj gnyaanrum
viliyaathu nitrkum pali


Shuddhananda Bharati

Against coveting another's wife

Who trifles with another's wife
His guilty stain will last for life.


GU Pope

Not coveting another's Wife

'Mere triflel' saying thus, invades the home, so he ensures.
A gain of guilt that deathless aye endures.

He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.


Mu. Varadarajan

இச்‌ செயல்‌ எளியது என எண்ணிப்‌ பிறனுடைய மனைவியிடம்‌ நெறிதவறிச்‌ செல்கின்றவன்‌, எப்போதும்‌ அழியாமல்‌ நிலைநிற்கும்‌ பழியை அடைவான்‌.


Parimelalagar

எளிது என இல் இறப்பான்-'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான்; விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும்-மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும்.
விளக்கம்:
(இல்லின்கண் இறத்தல்-இல்லான்கண் நெறிகடந்து சேறல்.)


Manakkudavar

(இதன் பொருள்) தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின்கண்ணே மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்,
(என்றவாறு). இது பழியுண்டா மென்றது.