குறள் 143

பிறனில் விழையாமை

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துஒழுகு வார்

vilindhthaarin vaerallar manra thaelindhthaaril
theemai purindhthuoluku vaar


Shuddhananda Bharati

Against coveting another's wife

The vile are dead who evil aim
And put faithful friends' wives to shame.


GU Pope

Not coveting another's Wife

They're numbered with the dead, e'en while they live, -how otherwise?
With wife of sure confiding friend who evil things devise.

Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.


Mu. Varadarajan

ஐயமில்லாமல்‌ தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம்‌ கொண்டு தீமையைச்‌ செய்து நடப்பவர்‌, செத்தவரைவிட வேறுபட்டவர்‌ அல்லர்‌.


Parimelalagar

மன்ற தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார்-தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார்; விளிந்தாரின் வேறு அல்லர்-உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர்.
விளக்கம்:


Manakkudavar

(இதன் பொருள்) தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி , ஒழுகுவார் மெய்யாக, செத்தாரின் வேறல்லர்,
(என்றவாறு) இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின், பிணத்தோ டொப்பரென்றது.