குறள் 142

பிறனில் விழையாமை

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்

arankatai ninraarul yellaam pirankatai
ninraarin paethaiyaar il


Shuddhananda Bharati

Against coveting another's wife

He is the worst law breaking boor
Who haunts around his neighbour's door.


GU Pope

Not coveting another's Wife

No fools, of all that stand from virtue's pale shut out,
Like those who longing lurk their neighbour's gate without.

Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door.


Mu. Varadarajan

அறத்தை விட்டுத்‌ தீநெறியில்‌ நின்றவர்‌ எல்லாரிலும்‌ பிறன்‌ மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில்‌ சென்று நின்றவரைப்‌ போல்‌ அறிவிலிகள்‌ இல்லை.


Parimelalagar

அறன்கடை நின்றாருள் எல்லாம் - காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்-பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை.
விளக்கம்:


Manakkudavar

(இதன் பொருள்) காமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும், பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப்போல் அறியாதாரில்லை,
(என்றவாறு).