குறள் 141

பிறனில் விழையாமை

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்

piranporulaal paetdolukum paethaimai gnyaalaththu
aramporul kantaarkan il


Shuddhananda Bharati

Against coveting another's wife

Who know the wealth and virtue's way
After other's wife do not stray.


GU Pope

Not coveting another's Wife

Who laws of virtue and possession's rights have known,
Indulge no foolish love of her by right another's own.

The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.


Mu. Varadarajan

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும்‌ அறியாமை, உலகத்தில்‌ அறமும்‌ பொருளும்‌ ஆராய்ந்து கண்டவரிடம்‌ இல்லை.


Parimelalagar

பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை-பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை; ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல்-ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள்நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை.
விளக்கம்:


Manakkudavar

பிறனில் விழையாமையாவது பிறனுடைய மனையாளது தோள் நலம் விரும்பாமை. (இதன் பொருள்) பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பியொழுகுகின்ற அறி யாமை, உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்,
(என்றவாறு).