குறள் 139

ஒழுக்கமுடைமை

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்

olukka mutaiyavarkku ollaavae theeya
valukkiyum vaayaatr solal


Shuddhananda Bharati

Good decorum

Foul words will never fall from lips
Of righteous men even by slips.


GU Pope

The Possession of Decorum

It cannot be that they who 'strict decorum's' law fulfil,
E'en in forgetful mood, should utter words of ill.

Those who study propriety of conduct will not speak evil, even forgetfully.


Mu. Varadarajan

தீய சொற்களை தவறியும்‌ தம்முடைய வாயால்‌ சொல்லும்‌ குற்றம்‌, ஒழுக்கம்‌ உடையவர்க்குப்‌ பொருந்தாததாகும்‌.


Parimelalagar

வழுக்கியும் தீய வாயால் சொல்ல-மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கம் உடையவர்க்கு முடியா.
விளக்கம்:
(தீய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முத லியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால், சொல்லுதல் தொழில் பலவாயின. 'சொல்' சாதியொருமை. 'சொல்லல்' எனவே அமைந்திருக்க 'வாயால்' என வேண்டாது கூறினார். 'நல்ல சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.)


Manakkudavar

(இதன் பொருள்) தீமை பயக்குஞ் சொற்களை மறந்தும் தம்வாயாற் சொல்லுதல், ஒழுக்க முடையார்க்கு இயலாது,
(என்றவாறு).